Record Details

வாய் முதலா? வட்டக்குதம் முதலா?

CMFRI Repository

View Archive Info
 
 
Field Value
 
Relation http://eprints.cmfri.org.in/10704/
http://puthu.thinnai.com/?p=20859
 
Title வாய் முதலா? வட்டக்குதம் முதலா?
 
Creator Saravanan, Raju
 
Subject Marine Biodiversity
 
Description பல்லுயிரி வள ஆராய்ச்சியில் (Biodiversity research) இருப்பதால் வகைபாட்டியியல் (taxonomy) எந்தளவுக்கு முக்கியம் என்பது உணரும் சந்தர்ப்பம் எப்பொழுதும் எனக்கு கிடைப்பதுண்டு. பெரும்பாலோனோர் வகைபாட்டியியல் படிப்பதை ஒரு சம்பிரதாயமாகவே வைத்துள்ளனர். கல்லூரிகளில் வகைபாட்டியியல் படிப்பும் tree of life தொடங்கி நடத்தப்படுவதேயில்லை. முக்கியமான பரிணாம வளர்ச்சியின் அடிப்படைகள் இதனாலே பல நேரம் புரிபடாமல் போகிறது. உலகில் உள்ள 99 சதவீத உயிரினங்கள் இருசமபக்கஒருமை அல்லது இருபக்கச்சமச்சீர் என்று சொல்லப்படும் bilateral symmetry உடையவை. இத்தகைய இருபக்கச்சமச்சீர் உயிரினங்கள் கருவில் உருவாவதின் அடிப்படையிலேயே இவைகள் வகைபடுத்தப்பட்டுள்ளன. கிரேக்க வார்த்தைகளின் அடிப்படையிலேயே இவைகள் Protostomes and Deuterostomes எனப்பெயரிடப்பட்டுள்ளன. Protostomes என்றால் கருவில் உருவாகும் பொழுது வாய் முதலில் தோன்றும் உயிரினங்கள், Deuterostomes என்றால் ஆசன வாய் (குதம்) முதலில் தோன்றும் உயிரினங்கள். பெரும்பாலான முதுகெலும்பற்ற உயிரினங்கள் Protostomes ஆகவும், முதுகெலும்பு உள்ள மற்றும் சிலவகை முட்தோலிகளும் Deuterostomes ஆகவும் உள்ளன. ஆம் மனித கருவுருவில் முதலில் தோன்றுவது ஆசன வாய் தான், இரண்டாவதாகத்தான் வாய் உருப்பெறுகிறது. 1908 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படும் இந்த வகைபாட்டியியல் தான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
 
Publisher திண்ணை
 
Date 2013-03-27
 
Type Article
NonPeerReviewed
 
Format text
 
Language en
 
Identifier http://eprints.cmfri.org.in/10704/1/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE_%20%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88.pdf
Saravanan, Raju (2013) வாய் முதலா? வட்டக்குதம் முதலா? திண்ணை : தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை.